சென்னை, அக். 7- அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டில் திராவிட இன எழுச்சிப் பேரணி மாலை 5.00 மணியளவில் பாரதியார் சாலையில் எழுச்சியுடன் தொடங்கியது.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமை தாங்கினார்
திருவள்ளூர் மா.மணி, வே.பாண்டு, எண்ணூர் வெ.மோகன், ஆவடி கார்வேந்தன், புழல் த ஆனந்தன், அரக்கோணம் சு.லோகநாதன், செங்கை பூ.சுந்தரம் மு.அருண்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன். கொடியசைத்து தொடக்கி வைத்தார்
கலை நிகழ்ச்சிகள் வீர விளையாட்டுகளை பகுத்தறிவு கலைத்துறை மாநில தலைவர் கலைமாமணி மு.கலைவாணன் தொடங்கி வைத்தார்
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இன எழுச்சிப் பேரணியை பார்வையிட்டு மகிழ்ந்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்
திரும்பும் இடமெல்லாம் கருங்கடல் போல் காட்சி அளித்தது, கழகத் தோழர்களின் அணிவகுப்பு, பெரியார் பிஞ்சுகள், மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தந்தை பெரியார் சமூக காப்பு அணியென தோழர்கள் கையில் கழக இலட்சியக் கொடி ஏந்தி பெரியார் படத்துடன் மாநில உரிமைகளை மீட்டெடுத்திடும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பினர்.
சடையார் கோவில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்டம், மற்றும் பறை இசை, வீர விளையாட்டுக்கள். பெரியார் பிஞ்சு முதல் தொண்டர்கள் வரை பட்டாளம் என தொண்டு செய்து பழுத்த பழங்களாகிய பெரியாரின் பெருந் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பரித்து வந்தனர். மின்னலாய் கழகக் கொள்கை முழக்கங்கள் விண்ணை முட்டின மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் அறிவியல் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் சிலம்பம், நாக்கில் சூடம் ஏந்தி சாமியார்களின் பித்தாலாட்டம் ஒழிக என மோசடிகளை தோலுரித்து காட்டும் வகையிலும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எல்லாம் இணைந்த கட்டுப்பாடான அணிவகுப்பு கண் கவர வைத்தது, பார்த்தவர்கள் நெஞ்சங்கள் நிறைந்தது.
ஊர்வலம். பாவேந்தர் சாலை சந்திப்பு வழியாக எம்.ஜி.ஆர் சாலையை கடந்து ஆர்ச் சர்வீஸ் ரோடு மறைமலை நகராட்சி பக்கம் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தது.