டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* விபத்தை ஏற்படுத்தியதாக நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
* ஒன்றிய அரசின் ஆணவத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும்; அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் மூட நம்பிக்கையை புகுத்தும் செயலுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “வாக்கு சோரி” என்ற தனது கூற்றுகளை மீண்டும் வலியுறுத்திய எதிர்க்கட்சி, பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது “நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின்” ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம் பெண்களின் பெயர்களை குறிவைத்து நீக்கியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி இந்து:
* கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி: சம்பவ இடத்தில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணையைத் தொடங்கியது.
தி டெலிகிராப்:
*மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை ஒரு சிலரிடம் மட்டும் சொத்து குவிவதால் ஜனநாயகத்துக்கே ஆபத்து: காங்கிரஸ் தாக்கு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* லிங்காயத் ஒரு தனி மதம்: “ஜாதி அமைப்பு நமது சமூகத்தில் வேரூன்றியுள்ளது. இந்த ஜாதி அமைப்பை வேரோடு அகற்ற, பசவண்ணா ஒரு தனி மதத்தைத் தொடங்கினார்” என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு.
– குடந்தை கருணா