புதுடில்லி, அக்.6 நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டு நடந்த வரதட்சணை மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:
2023ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பதிவான மொத்த வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை 6,156 ஆகும். இதில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வரதட்சணை மரணங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளன.
அதிகபட்ச பாதிப்பு
- உத்தரப் பிரதேசம் (UP) – 2,122 மரணங்களுடன் நாட்டின் முதன்மை மாநிலமாக உள்ளது.
- பீகார் – 1,143 மரணங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- மத்திய பிரதேசம் (MP) – 468 மரணங்களுடன் மூன்றா வது இடத்தில் உள்ளது.
- இராஜஸ்தான் – 428 மரணங்கள் பதிவாகியுள்ளன.
- மேற்கு வங்காளம் (WB) – 350 மரணங்கள் பதிவாகி யுள்ளன.
தலைநகரான டில்லியில் 115 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஜம்மு காஷ்மீர் (9), பஞ்சாப் (44), அரியானா (207), மகாராட்டிரா (170), குஜராத் (12), ஒடிசா (231), ஜார்கண்ட் (218) போன்ற மாநிலங்களிலும் கணிசமான அளவில் வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் குறைவு
இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் தான் மிகக்குறைவான வரதட்சணை மரணங்கள்
- தமிழ்நாடு (TN) – 11 மரணங்கள்.
- கேரளா – 8 மரணங்கள்.
வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் இருந்தபோதிலும், சமூகத்தில் வரதட்சணைக் கொடுமை மற்றும் மரணங்கள் இன்னும் ஒரு பெரிய சவாலாக நீடிப்பதை சுட்டிக் காட்டுகின்றன.