பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் சார்பாக உவகை பொங்க நடைபெற்ற தந்தை பெரியாரின் 147-ஆம் பிறந்த நாள் விழா

5 Min Read

“அறிவுலக ஆசான், பகுத்தறிவுப் பகலவன், 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்,தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழாவை உலகம் முழுவதும் நன்றி உணர்ச்சி உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

குழந்தைகளின் உள்ளங்களில் பெரியார் கொள்கையைக் கொண்டு சேர்க்கும் நல்ல நோக்கத்தோடு,அமெரிக்காவில் இருக்கும் நம் குழந்தைகளுக்காக,மாணவர்களுக்காக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பெரியார் பன்னாட்டு அமைப்பு குழந்தைகளை ஈர்க்கும் நிகழ்ச்சியாக, பெரியாரைப் புரிந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்வை நிகழ்த்துகிறது.

முதலாவதாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அய்யா  நம்மோடு கலந்து உரையாடுவார்” என ஒருங்கிணைப்பாளர் அறிவுப்பொன்னி அழைத்தார்.

மருத்துவர் சோம.இளங்கோவன் உரையில்,

அருமைத் தமிழ் நெஞ்சங்களே, உலகெங்கும் வாழும் பெரியார் தொண்டர்களே,பற்றாளர்களே,எங்கள் அருமை நண்பர்களே,உங்கள் அனைவருக்கும் தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளைத்  தமிழர் தலைவர்  ஆசிரியர் வீரமணி அவர்களின் சார்பிலும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பிலும் தெரிவித்து மகிழ்கின்றோம். நான் தமிழர்களின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.

என்னவென்றால் உலகெங்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலே, டொரான்டோ பல்கலைக்கழகத்தின் பிரான்சில் கோடி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாத்தா செல்வி ஆஸ்டின் பல்கலைக்கழகத்தின் சாரா ஹெட்ரிக்ஸ்   மற்றும் உலகெங்கும் உள்ள நியூயார்க், சிங்கப்பூர் போன்ற இடங்களில் இருக்கும் பேராசிரியர்கள் வந்து கலந்துகொண்டு இரண்டு நாள் நிகழ்வாக திராவிட மாடல் பற்றிய மாநாடு நடந்தது என்றால் இதைவிட நமக்குப் பெருமை இருக்க முடியுமா? ஆம் பெருமை இருக்கின்றது.

தந்தை பெரியார் படத்திறப்பு

அங்கே தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்துத் தந்தைபெரியார் அவர்களை பெருமையுடன் முதலீடு செய்கின்றேன் என்று தமிழ் நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது நமக்கெல்லாம் மிகப்பெருமையாக இருக்கின்றது.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பிலே ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் 4-ஆவது மாநாடு நடைபெறுகிறது.உலகெங்கும் பெரியார் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அதில் நாமும், நமது இளைய தலைமுறையினரை அழைத்து அவர்களின் திறமையைக் காட்டும்படியாக பேச்சுப்போட்டி,பாட்டுப்போட்டி,ஓவியப்போட்டி, என்று பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றோம்.

அதில் கலந்துகொள்ள வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக மாற்றி அதை சமூக  நீதி உறுதிமொழி ஏற்கும் நாளாக தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து ,நான் இப்போது உறுதிமொழியைப் படிக்கப்போகின்றேன், நான் படிக்கும் உறுதிமொழியை ஒவ்வொருவரும் திருப்பிச்சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று உரையாற்றியபின் சமூக நீதி உறுதிமொழியை சோம.இளங்கோவன்  சொல்லச்சொல்ல ,அனைவரும் திருப்பிச்சொல்லி சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

காணொலி ஒளிபரப்பு

இணையத்தின் வழியாக உருவாக்கப்பட்ட தந்தை பெரியார் பற்றிய காணொலி ஒளிபரப்பப்பட்டது.பதிவு செய்து கொண்ட குழந்தைகள் தொடர்ந்து 5 முதல் 9 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.நடுவர்களாக வந்திருந்தவர்களை வரவேற்று, பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளும் குழந்தைகளை ஒவ்வொருவராக அறிவுப்பொன்னி அழைத்தார்.

தியாசினி கணேசன்,ஆதவன் பாலமுருகன்,(ஆங்கிலத்தில்),ஆதிரையன் பிரபாகரன்,வித்யா(ஆங்கிலத்தில்),இவான் மித்ரா அருண்,கவின் ஒச்சாத்(தேவர்),மகிழ்மொழி ,பிரிதிவ் அலெக்ஸ்பாண்டியன்(ஆங்கிலத்தில்),வெண்பா வாசுதேவன்ஆகியோர் மழலைக் குரலில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தந்தை பெரியார் பற்றியும்,திருக்குறள் பற்றித் தந்தை பெரியார் சொன்னது பற்றியும் அவையில் எடுத்துவைத்தனர்.அதைப்போல 10-13 வயதுவரையுள்ள குழந்தைகளும், 14-17 வயதுவரையுள்ள மாணவ மாணவிகளும் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு அருமையாக தந்தை பெரியாரின் பல்வேறு பரிணாமங்களை உள்வாங்கிப்பேசினர்.

பாட்டுப்போட்டி

அடுத்ததாக 5 வயது முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாட்டுப்போட்டி நடைபெற்றது. புரட்சிக் கவிஞரின் பாடல்கள் பாடப்பட்டன. ஆராதனா சிவக்குமார்,ஜியா தித்வி, நாகப்பன்,சீனிகா உத்ரா,ஷ் ரிதினியா, தனுஷ்ரி ஆகியோர் வெவ்வேறு பாடல்கள் பாடினர். அதைப்போல 10-13 வயதுவரையுள்ள குழந்தைகளும், 14-17 வயதுவரையுள்ள மாணவ மாணவிகளும் பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி பாடல்களையும், புரட்சிக்கவிஞரின் பாடல்களையும் பாடினர்.

ஓவியப்போட்டி

அடுத்த்தாக ஓவியப்போட்டி நடைபெற்றது. அமெரிக்கக் குழந்தைகள் சமூக நீதி,சமத்துவம்,பெண்ணுரிமை,மனித நேயம்,இக்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற தலைப்புகளில் ஓவியத்தை வரைந்து அனுப்பியிருந்தனர்.அந்தக் காணொலியின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.

ஆதிரையன் பிரபாகரன்,ஆதிஷ் தயாநிதி,அத்வைதா வெங்கடேஷ்,இனியாழ் ஜெயந்தி மகேந்திரன்,லக்ஷிகா அசோக் குமார்,மழைமொழி ஆர்.பி,மேனகா குமாரிளங்கோவன்,நாகப்பன் நெல்லியன்,பெரிபுகல் பி,பிரபாகரன் ரவிக்குமார், பிரதிக்ஷா சண்முகவேலு, ப்ரிதேஷ் சிறீதிக் மோகனரங்க,பிரிதிவ் அலெக்ஸ் பாண்டியன், சிறீரெட்டன்யா சிவபிரகாஷ் ஆகியோர் 5-முதல் 9 வயது வரையிலான ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு அருமையாக வரைந்து இருந்தனர்.

10-13 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான ஓவியப்போட்டியில் ஆக்ஷிவ் தயா, அஜீஷ் சிறீதிக் மோகனரங்கா. கவுதம் பாரதி,ஹர்ஷன் குட்டி முரளி,இலக்கிய எழில்வடிவன்,இனிய எழில்வடிவன்,ஜாய் புண்ணியராஜ்,நித்திலா சுதாகரன்,இராமநாதன் நெல்லியன்,ரியா சாய் தீபக்,சஷ்ரிகா உத்திரா, விஸ்வந்த் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்து காண்பித்தனர்.

14 வயது முதல் 17 வயதுவரை உள்ள மாணவ மாணவிகள் பிரிவில் ரித்வின் சிவபிரகாஷ்,வெங்கட சாத்விக் ரெட்டி தும்மலா,யாழ்விழி ஆர்.பி ஆகியோர் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தனர்.

கட்டுரைப்போட்டி

அதைப்போலக் கட்டுரைப்போட்டி நடைபெற்றது..கொடுத்த தலைப்புகளில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் கட்டுரைகள் மிகவும் அருமையாக கருத்துகள் நிறைந்து எழுதியிருந்தனர்.

க கூத் என்னும் கூகுள் பிளே ஸ்டோர் ஆப் மூலம்  கேள்விகள் கேட்கப்பட்டு,இணையத்தின் வழியாக உடனுக்குடன் பதிலளிக்கும் போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது.அவர்கள் பதில் அளித்தவுடன் உடனுக்குடன் மதிப்பெண்ணைக் காட்டியது. இந்த நிகழ்வினை மருத்துவர் சரோஜா இளங்கோவன்  மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தார். நிகழ்வே புதுமையாக இருந்தது. நிகழ்வில் பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் பொறுப்பாளர்கள் தமிழ்மணி,அருள் பாலகுரு ஆகியோர் மிகச் சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

கலந்து கொண்ட அனைவர்க்கும் பெரியார் Periyar OTT யும் பரிசுகளும், சிறப்பாகச் செய்தவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப் பட்டன. நடுவர்கள் புகழ்ந்து பேசினார்கள்.

முனைவர் நேரு வாழ்த்துரை வழங்கினார்.

மருத்துவர் சரோ இளங்கோவன் கலந்து கொண்ட அனைவரையும், அருமையான வார்ததைகளைப் பேசியக் குழந்தைகளின் வார்ததைகளைச் சொல்லிப் பாராட்டியும், கடுமையாக உழைத்தத் தோழர்களையும் , நேரம் தந்த நடுவர்களையும் பாராட்டித் தந்தை பெரியார் , தமிழர் தலைவர் ஆசிரியர் உழைப்பைப் பாராட்டி அனைவர்ககும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒளிப்பதிவு அனைவருக்கும், நனகொடை அளித்த வள்ளல் பெருமக்கள் பெயர்கள் அறிவிக்கப் பட்டு அவர்கட்கும் மற்றவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *