சென்னை, அக்.6- தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநகம், வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
அவர்களுக்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தவும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், உலக வங்கியின் நிதி உதவியுடன் “உரிமைகள் திட்டம்” கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது.
6 ஆண்டுகளுக்கான திட்டம், ரூ.1773.87 கோடி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது மறுவாழ்வு சேவைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை தங்கள் இருப்பிடம் அருகே பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்கிறது.
பணியிட விவரம்:
பிளாக் ஒருங்கிணைப்பாளர் – 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் – 94
உளவியலாளர் / ஆலோசகர் – 94
சிறப்புக் கல்வியாளர் – 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் – 94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் – 94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) – 188
அலுவலக உதவியாளர் (SDC) – 94
ஊதிய விவரம்:
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவி – ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவி – ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவி – ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவி – ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவி – ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவி – ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவி – ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவி – ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவி – ரூ.12,000
ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இணையதள அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இதற்கான விண்ணப்பங்களை tnrightsjobs.tnmhr.com இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14-10-2025 ஆகும்.