மறைமலைநகர், அக். 5- செங்கை மறைமலைநகரில் நேற்று (4.10.2025) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
கருத்தரங்கம்
மாநாட்டில் பிற்பகல் 2 மணியளவில் “ஆர்.எஸ்.எஸ். தொற்றுநோயும் சுயமரியாதை இயக்க மாமருந்தும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்ற, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தொடக்கவுரையாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். பரப்பும் நோய்கள்
மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், பெண்ணடிமைத்தனம் என்ற தலைப்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மதவாதம் என்ற தலைப்பில் இரா.பெரியார் செல்வன், மநுதர்மம் என்ற தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, சமஸ்கிருத ஆதிக்கம் என்ற தலைப்பில் இராம.அன்பழகன், ஜாதி-தீண்டாமை என்ற தலைப்பில் வழக்குரைஞர் பா.மணியம்மை, சமூக அநீதி என்ற தலைப்பில் முனைவர் காஞ்சி பா.கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.
கவிஞர் கனிமொழி கருணாநிதி
இக்கருத்தரங்கின் சிறப்பாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் நிறைவுரையாற்றினார். இறைவி இணைப்புரை வழங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நன்றி கூறினார்.
திராவிடர் இன எழுச்சிப் பேரணி
மாலை 5 மணியளவில் செங்கை – மறைமலைநகர் அண்ணா சாலை – பாவேந்தர் சாலை சந்திப்பில் இருந்து திராவிடர் இன எழுச்சிப் பேரணி தொடங்கி மாநாட்டு திடலை வந்தடைந்தது.
முன்னதாக நடைபெற்ற இப்பேரணியை மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமை யில், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீர விளையாட்டுகளை பகுத்தறிவு கலைத் துறை மாநிலத் தலைவர் ‘கலைமாமணி’ மு.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
இப்பேரணிக்கு திருவள்ளூர் மா.மணி, வே.பாண்டு, எண்ணூர் வெ.மு.மோகன், ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், அரக்கோணம் சு.லோகநாதன், செங்கை பூ.சுந்தரம், மு.அருண்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று வழி நடத்தினர். பேரணியை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார். பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பை அதன் இயக்குநர் பொய்யாமொழி, தலைமை பயிற்றுநர் சி.காமராஜ், பயிற்றுநர்கள் கி.முரளி, அண்ணா.சரவணன், இராம.சகாதேவன், பெரியார் சமூக காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
காணொலி – கலை நிகழ்ச்சிகள்
மாலை 6 மணிக்கு பெரியார் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த அன்னை நாகம்மையார் நினைவு அரங்கம், அன்னை மணியம்மையார் நினைவு மேடையில் “நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்” என்ற தலைப்பில் பெரியார் கல்வி நிறுவன மாணவர்களின் காணொலி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுபபினர் தா.கருணாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகர மன்றத் தலைவர் ஜெ.சண்முகம், செங்கல்பட்டு நகரச் செயலாளர் எஸ்.நரேந்திரன், கூடுவாஞ்சேரி நகர மன்றத் தலைவர் எம்.கே.கார்த்திக், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சந்தானம், மறைமலைநகர் தெற்கு நகர தி.மு.க. செயலாளர் த.வினோத்குமார், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன், மறைமலைநகர் திராவிடர் கழக நகரத் தலைவர் திருக்குறள் ம.வெங்கடேசன், காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
நிறைவு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் நிறைவு நிகழ்விற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவற்புரையாற்ற, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்.
வாழ்த்துரை
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தலைமையுரை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டில் தலைமையுரையாற்றினார்.
முதலமைச்சர் நிறைவுரை
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கல்வெட்டைத் திறந்து வைத்து மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன் நன்றி கூறினார்
ஒளிப்படக் கண்காட்சி
இம்மாநாட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றினை எடுத்துரைக்கும் ஒளிப்படக் கண்காட்சியினைப் பார்வையிட்டார்.
வைக்கம் – நூல் வெளியீடு
இம்மாநாட்டு நிகழ்வில் தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு” காட்சியும் – மாட்சியும் நூலினை வெளியிட, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சிறப்பித்தல்
இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து சுயமரியாதைச் சுடர் நினைவுப் பரிசை வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்த தந்தை பெரியார் படத்தின் பதிப்பை வழங்கி சிறப்பித்தார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வீரவாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.
மாநாட்டை சிறப்பிக்க வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
இச்சிறப்புமிக்க வரலாற்று நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.இராசா, க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.நா.எழிலன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, திருமதி வரலட்சுமி மதுசூதனன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் திராவிடர் கழக, தி.மு.கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடெங்குமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.