சென்னை பெரியார் திடலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு வந்த தொலைப்பேசி மிரட்டலைத் தொடர்ந்து இன்று (04.10.2025) அதிகாலை 1 மணியளவில், சென்னை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு காவல்படையினர் பெரியார் திடலில் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர், அது வெறும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்குப் பின்னணியில் எந்த அமைப்புகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பது அவசியமாகும்.