6 மாதங்கள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில் இதனை விட குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்து எதுவுமில்லை. குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துவது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இருப்பினும், உங்கள் குழந்தை திரவங்கள் அல்லது திடப்பொருட்களை உட்கொள்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், புதிய உணவுகளை அவர்களின் உடல் எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதை கண்காணிப்பது முக்கியம். பல குழந்தைகள் ஆரம்ப காலக்கட்டத்தில் உணவு ஒவ்வாமைக்கு ஆளாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட உணவுக்கு அசாதாரண உடல் எதிர்வினைகளை அனுபவிக்கிறார்கள்.
உணவு ஒவ்வாமை என்றால் என்ன?
உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நீங்கள் உண்ணும் ஒரு குறிப்பிட்ட உணவுக்கு எதிர்மறையான எதிர்வினையை ஏற்படுத்தும் போது உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் ஒவ்வாமைக்கு ஆளாகலாம், எனவே அவர்களின் தூண்டுதல்களை அடையாளம் காண வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% மற்றும் பெரியவர்களில் 4% வரை உணவு ஒவ்வாமை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில நேரங்களில், உணவு ஒவ்வாமை உணவு சகிப்புத்தன்மையுடன் குழப்பமடையலாம். குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பைப் பொறுத்து இது மாறுபடும்.
குழந்தைகளுக்கு உணவு அலர்ஜியை
ஏற்படுத்தும் உணவுகள்
பசும் பால், முட்டை, கோதுமை, சோயாபீன், வேர்க்கடலை, மீன் மற்றும் இறால். இது மட்டுமின்றி பாலாடைக்கட்டி, பருப்பு, தேங்காய், சோளம் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற உணவுகளும் குழந்தைகளுக்கு உணவு அலர்ஜியை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
உணவு ஒவ்வாமை உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது புத்திக்கூர்மை குறைதல் அல்லது பள்ளி செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தை ஒவ்வாமை அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தை மருத்துவரை அணுகி, ஒவ்வாமை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு எளிய இரத்த பரிசோதனையின் மூலம் பல்வேறு வகையான ஒவ்வாமைகளின் உணர்திறனைக் கண்டறிய முடியும்.