சென்னை அக். 3- கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாது எனச் சமூகச் செயற் பாட்டாளர்கள் கூட் டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் நீதியரசர் சந்துரு, அய்.ஏஎஸ் அதிகாரிகள் ஆர். பாலகிருஷ்ணன், எம்.ஜி. தேவசகாயம், எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை, ஊடகவியலாளர் தி இந்து என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கலை இலக்கியவாதிகள் மற்றும் சமூகச் செயற் பாட்டாளர்கள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
முக்கியக் குற்றச்சாட் டுகள் மற்றும் வலியுறுத்தல்கள்:
பேரழிவுக்குக் காரண மான அணுகுமுறை: விஜய் தனது கட்சியினர் மற்றும் ரசிகர்களைச் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும், பொதுவாழ்க்கைக்கும் உகந்ததல்ல என்றும், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச் சென்றது என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
முன்னோட்டமான முந்தைய நிகழ்வுகள்: கரூருக்கு முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் நடந்த விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டமாகவே இருந்தன. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக் காமை, பொதுச் சொத்து க்களை சேதப்படுத்துதல், பொறுப்பற்ற நடத்தை போன்ற அத்துமீறல்களை விஜய் கண்டிக்காமல், அவற்றை இயல்பானதாக்க முயற்சித்ததுதான் இந்த அநியாய மரணங்களுக்குக் காரணம்.
உயிரிழப்புகளுக்கான நேரடிக் காரணங்கள்: விஜய் அறிவித்திருந்த நேரத்திற்குள் வராமல் மக்களை 7 மணி நேரத்திற்கும் மேலாகக் காக்க வைத்தது, குடிநீர், உணவு, கழிவறை போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதது, வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னாலேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என காணொளிச் சான்றுகள் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சதி”க் கட்டுக்கதைக்குக் கண்டனம்: இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் “திட்டமிட்ட சதி” இருப்பதாகப் பரப்பப்படும் உண் மைக்கு மாறான கட்டுக்கதையைச் சமூகச் செயற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர். மேலும், இந்தச் சதித் தகவலுக்கு வலுவூட்டும் விதமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் குழு கருத்து தெரி வித்து வருவதையும் ஏற்க முடியாது என கூட் டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் காணொலி விளக்கம்: விபரீதம் நிகழ்ந்த பிறகும் கவனம் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறி அமைதிகாத்த விஜய், கட்டுக்கதை கிடைத்த தைரியத்தில் வெளியிட்ட காணொலியில் குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ, தார்மீகப் பொறுப்பேற்போ இல்லை என்றும், அரசின் மீது பழிசுமத்திவிட்டுத் தப்பிக்கும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட் டுள்ளது.
வலதுசாரிகளை அண்டுவது: “இழைத்து விட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன” என்றும் கூட்டறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை க்கான வலியுறுத்தல்: “சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்குக் காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாது” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உரிமைப் பறிப்புக்கு எதிர்ப்பு: கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்றும், அரசமைப்பு உரிமைகளைத் தமிழ்நாடு அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் அணுகு முறை நேர்மைத்தன்மை அற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டு மென்றே தவறாக வழி நடத்துவதாகவும் உள்ளது எனவும், அவரது கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும் எனவும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.