டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2025-26ஆம் கல்வியாண்டிற்கான கட்டாயக்கல்வி மாணவர் சேர்க்கை: 6ஆம் தேதி அறிவிப்பு வெளியீடு: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஆர்டிஇ (தேசிய கல்விக் கொள்கை) நிதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
* அரசு பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா:; 45 பேர் கைது: சென்னை போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா, உரிய அனுமதி இன்றி அரசு பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி நிகழ்ச்சி நடத்தியதாக கூறி அவர்களை போரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
* உத்தரப்பிரதேசம், பரேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முஸ்லிம் பேரணியில் வன்முறை வெடித்தது தொடர்பாக மதகுரு கைது செய்யப்பட்ட நிலையில், வதந்திகளை தவிர்க்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
தி இந்து:
* யூதர்களும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் இரட்டைச் சகோதரர்கள்: ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டு நாணயம் வெளியிட்டது, நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம். இஸ்ரேலில் உள்ள யூதர்களும், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இரட்டைச் சகோதரர்கள் என அவர் கடுமையான விமர்சனம்.
* பீகார் போன்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவு கவலைக்குரிய விஷயம் என்கிறது தலையங்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடு: சனிக்கிழமை கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு, நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் மீது நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
* துர்கா பூஜையில் பலி: மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வின்போது இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், 13 பேர் உயிரிழந்தனர்; இவர்களில் பத்து பேர் குழந்தைகள்.
* நாட்டில் நீதி மற்றும் உரிமைகளை பேசுவது ‘தேசத் துரோகச் செயலாக மாறுகிறது’. சோனம் வாங்சுக்கின் கைது குறித்து ஒன்றிய அரசை தாக்கி, பாஜகவிற்கும் நல்லாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என உத்தவ் தாக்கரே காட்டம்.
* பிரதமர், முதலமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யும் மசோதாக்கள் மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு அமைப்பதில் தாமதம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களை நியமிக்காது என்று தெரிவித்த நிலையில், கூட்டு நாடாளுமன்றக் குழு ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
* காந்தி சிலைக்கு காவி ஆடை : வியாழக்கிழமை காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சிய கத்திற்குள் உள்ள காந்தியாரின் சிலையைச் சுற்றி பாஜக கட்சியினர் காவி சால்வை போர்த்தினர். காவி சால்வையுடன் கூடிய சிலையின் ஒளிப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பிறகு, அருங்காட்சியக நிர்வாகம் அதை அகற்றியது.
*காந்தியின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்: சர்வாதிகார கண்ணோட்டத்துடன் கூடிய ஆர்எஸ்எஸ் வகுப்புவாத அமைப்பு என காந்தியார் அழைத்ததாக காங்கிரஸ் கூறியது.
– குடந்தை கருணா