செங்கை-மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு. பசும் பொன் ஒருங்கிணைப்பில் தாம்பரம் குணசேகரன், த.மரகதமணி, அரும்பாக்கம் தாமோதரன், ராமச்சந் திரன், ஆவடி ரவீந்திரன், நம்பியூர் ப.வெற்றிவேல் ஆகியோர் நேற்று (2.10.2025) வர்த்தகர்களையும், பொது மக்களையும் சந்தித்து வசூலாக 8,792 ரூபாயை திரட்டினர்.
காந்தியார் சிலைக்கு
காவிகள் காவித் துண்டு
மொத்தம் 10 நாள்கள் பலரை சந்தித்து, பல சூழ்நிலைகளிலும் பொது மக்களின் பல்வேறான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தும் நம் இயக்க மகளிரணி, மகளிர் பாசறையினர் கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் முத்தையன் வழிகாட்டுதலிலும் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் திட்டமிட்ட ஒருங்கிணைப்பிலும், கழகத் தோழர்கள் துணையுடனும் திரட்டிய மொத்த தொகை (தாம்பரம் கழக மாவட்டம் ரூ.65,006, செங்கற்பட்டு மாவட்டம் 62,502) ரூ.1,27,508 ஆகும்.