மறைமலைநகர், அக். 3- அக்டோபர் – 4 செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுப் பணிகள் அனைத்தையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்
நாளை (4.10.2025) செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு முதலமைச்சர் வருகை ஒட்டி ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சரும், செங்கல்பட்டு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ. அன்பரசன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ், ஆகியோர் மாநாட்டுப் பந்தல், மேடை, உணவு ஏற்பாடு, மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடு உள்பட அனைத்து மாநாட்டுப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை கூறினார்கள்.
மாநாட்டுத் திடலை பார்வையிட வருகை புரிந்த அமைச்சருக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்பு செய்து, தந்தை பெரியார் சமூக காப்பு அணியினர் வணக்கம் செய்து வரவேற்று மகிழ்ந்தார்கள். ரிசிவந்தியம். சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், ஊ.ஜெயராமன், கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மறைமலை நகர் (வடக்கு) திமுக நகர செயலாளர்-நகர மன்ற தலைவர் ஜே. சண்முகம், மாநாட்டு வரவேற்பு குழு தலைவர், தாம்பரம் கழக மாவட்ட தலைவர் ப.முத்தையன், செங்கை மாவட்ட செயலாளர் நரசிம்மன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநாட்டு வரவேற்பு குழு துணை தலைவர்கள் எல்லப்பன், அ.வெ.முரளி, அ.இரா.சிவசாமி, பெரியார் சமூக காப்பணி ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ். சமூக காப்பணி இயக்குனர் தே. பொய்யாமொழி, பயிற்றுநர்கள் காமராஜ், சகாதேவன், முரளி, அண்ணா.சரவணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அருண்குமார், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், ப.க. தலைவர் வசந்தன், திருக்குறள் வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் ப.முருகன், படப்பை சந்திரசேகரன், மறைமலை நகர செயலாளர் முடியரசன், மு.அறி வுச்சுடர், ஆகியோர் உடனிருந்தனர்.
கழக சொற்பொழி வாளர்கள் வழக்குரைஞர் சு.சிங்கார வேலர், மாங்காடு சுப.மணியரசன், திரு வாரூர் நகர செயலாளர் ஆறுமுகம். ஆகியோர் மாநாட்டை விளக்கி வாகனத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.