சிந்த்வாரா, அக்.3- மத்தியப் பிர தேச கிராமங்களில் ஒரே மாதத்தில் சிறுநீரகத் தொற்று காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
சிறுநீரகத் தொற்று
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள டாமியா, கோய்லாஞ்சல், திகாவானி கிராமங்களை சேர்ந்த பல சிறுவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஆகியவற்றின் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த 4-ஆம் தேதி ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சமீபத்தில் திகாவானி கிராமத்தை சேர்ந்த ஒருசிறுவன் காய்ச்சல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட சிரமத்தால் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி உயிரிழந்தான். இந்த நிலையில், ஒரு வயது முதல் 7 வயது வரையிலான மேலும் 5 குழந்தைகள் சிறுநீரகத் தொற்றால் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இதில மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள டாமியா, கோய் லாஞ்சல் கிராமங்களில் சிறுவர்கள் உயிரிழப்பு அதிகம் பதிவாகி உள்ளது. இதுபோன்ற பாதிப் புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குழு சமீபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து சோதனைக்காக மாதிரி களை சேகரித்தது.
அரசு உத்தரவு
போபாலில் இருந்து வந்த சுகாதார துறை குழு வீடுகளில் இருந்து தண்ணீர் மாதிரிகளையும் சேகரித்தது. இவை புனேவில் உள்ள ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுகாதார துறை ரத்த மாதிரிகள், கல்லீரல், சிறுநீரக செயல்பாடு சோதனைகளை 500க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தியது. ஆனால் இன்னும் குறிப்பிட்ட நோய் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிந்த்வாரா ஆட்சியர் சைலேந்திர சிங், நோய்த் தொற்றின் அறிகுறிகளை காட்டும் குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கவும், முழுமையாக முன்முயற்சியுடன் இருக்கவும் அரசு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.