போபால், அக்.3 மத்தியப் பிரதேசத்தில் துர்கா பூஜை நிறைவடைந்த நிலையில், துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வல மாகச் சென்றபோது நடந்த இரண்டு விபத் துகளில் 13 பேர் உயிரிழந் தனர். இவர்களில் பத்து பேர் குழந்தைகள் ஆவர்.
ஆற்றில் கவிழ்ந்தது
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அருகே உள்ள இஸ்கோரியா பகுதியில் துர்கா சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதற்காக ஒரு டிராக்டரில் ஏற்றிக் கொண்டு பக்தர்கள் ஊர் வலமாக சென்றனர். ஒரு பாலத்தின்மீது டிராக்டர் சென்று கொண்டு இருந்த போது அந்த டிராக்டர் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் 12 குழந்தைகள் ஆற்றுக்குள் விழுந்தனர். கிராம மக்கள் உடனடியாக 11 குழந்தைகளைக் காப் பாற்றினர். மீட்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காணாமல் போன ஒரு குழந்தையைத் தேடும் பணியில் காவல் துறையினரும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையின ரும் (SDRF) ஈடுபட்டுள்ளனர்.
12 வயது சிறுவன் தவ றுதலாக டிராக்டரை இயக்கியதால் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காண்ட்வா மாவட்டத்தில்….
காண்ட்வா மாவட்டத் தின் பாந்தனா வட்டத்தில், அர்ட்லா மற்றும் ஜாம்லி கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் துர்கா சிலையைக் கரைப்பதற்காக டிராக்டரில் சென்ற ுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் பலியானார்கள். அதில் எட்டு பேர் பெண் குழந்தைகள் ஆவர்.
டிராக்டரில் அதிகப் படியான ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் சிலரை காண வில்லை; அவர்களும் இறந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மொத்தம் நிகழ்ந்த இந்த இரண்டு விபத்துகளிலும் இதுவரை 13 பேர் உயிரிழந்தது உறுதிப ்படுத்தப்பட்டுள்ளது.
துர்காதேவி சிவபெரு மானின் இல்லத்திற்கு திரும்புவதைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு துர்கா பூஜையின் போதும் சிலைகள் ஆறுகள், குளங்கள், கடல்களில் ஆரவாரத்துடன் ஊர் வலமாக சென்று கரைக்கப்படுகிறதாம்!