ஈரோடு, அக். 2– பகுத்தறிவாளர் சுயமரி யாதை வீரர் பெரியார் நகர் சம்பத் குமார் அவர்களது 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார் .தோழர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கினார். “விடுதலை” சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.
கலந்து கொண்ட வர்கள் ஈரோடு த.சண்முகம் தலைமை செயற்குழு உறுப்பினர், இரா நற்குணன் மாவட்ட தலைவர் கோ.பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கு. சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் கோ திருநாவுக் கரசு, பேராசிரியர் ப. காளிமுத்து, வீ. தேவராஜ் தமிழ்ச்செல்வன், ராஜேஸ்வரி தினகரன், மகேந்திரன், மா.பிரபு, எஸ் கண்ணன், வழக்குரைஞர் கண்ணம்மா, யுவராஜ், பி.என்.எம். பெரியசாமி, தி.மு.க. இளைய கோபால், செல்வம், பிரவீன்ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.
முன்னதாக பிறந்த நாள் விழா கேக் வெட்டப் பட்டது அவருக்கு தோழர்கள் அனைவரும் பயனாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார்கள்.