மறைமலைநகரில் அக். 4ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்!
தி.மு.கழகத்தினர் அணி திரண்டு வாரீர்! அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!
காஞ்சிபுரம், அக்.2– மறைமலைநகரில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அக்டோபர் 4–ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணியள வில் நடைபெறும் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மாபெரும் மாநாட்டில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.கழகத்தினர் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்கும்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு வருகிற, அக்டோபர் 4–ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் மறைமலைநகரில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மாபெரும் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மாநாட்டு சிறப்புரை யாற்றுகிறார்.
நம் நெஞ்சம் நிறைந்த அன்புத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டை மிகவும் எழுச்சியுடன் அலங்கார மேடை – பிரம்மாண்ட மான பந்தல் அமைத்து நடத்திட ஏற்பாடு-கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திராவிடர் கழகத்தின் சார்பில் கோலாகலமாக நடைபெறும் இந்த மாநாட்டில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து மாநகர – பகுதி – ஒன்றிய – நகர – பேரூர் – சிற்றூர்களில் இருந்தும் தி.மு.கழகத் தோழர்கள் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து, மறைமலைநகரில் வரலாற்று சாதனையை படைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த தி.மு.கழகத் தோழர்களும் அலை கடலென திரண்டு பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இம்மாநாட்டில் பங்கேற்பது “நமது உரிமை” “நமது கடமை” என்ற அந்த உணர்வோடு, காஞ்சி வடக்கு மாவட்-டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் அக்டோபர் 4–ஆம் தேதி மாலை 5.00 மணிக்கெல்-லாம் மறைமலைநகர் பெரியார் திடலுக்கு திரண்டு வந்திட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கி-றேன்.
மறைமலைநகர் பெரியார் திடலில் தி.மு. கழக தீரர்களும், திராவிடர் கழகத் தோழர்களும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் கடல் வெள்ளம் புகுந்தது போல காட்சியளிக்கின்ற வகையில் மாவட்ட த்தில் உள்ள ஒட்டு மொத்த கழகத்தினரும் திரண்டு வந்து பங்கேற்று, பேரறிஞர் அண்ணா பிறந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்போம், வாரீர்! வாரீர்! என இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.