திருப்பத்தூர், அக். 1- அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில், சமூகப் காப்பு அணி மரியாதையுடன் கழகக் கொடியை ஏற்றி மாநாட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் துவக்கி வைக்கிறார்.
பெரியார் சமூகக் காப்பு அணியில் பங்கேற்க திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் இராஜேந்திரன், திருப்பதி, அன்பு, சந்துரு, ஜெயசூர்யா, துருவன்,சுரேந்தர், அஜித், தர்ஷனி ஆகிய தோழர்கள் பங்கேற்க 30.09.2025 அன்று மாலை செங்கல்பட்டு மறைமலை நகர் புறப்பட்டனர். அவர்களை கே. சி. எழிலரசன் மாவட்டத் தலைவர், பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் மற்றும் பெ. ரா. கனகராஜ் கந்திலி ஒன்றியச் செயலாளர் ஆகியோர்கள் வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார்கள்.