ஜெயங்கொண்டம், அக். 1- செங்கல்பட்டு மறைமலை நகரில் நடை பெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டிற்கு செல்வது குறித்து ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் தா.பழூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோ சனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
28.9.2025 அன்று காலை 11 மணியளவில் ஆண்டிமடம் தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் க.கார்த்திக், ஒன்றிய செயலாளர் தியாக. முரு கன். ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன் நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி சுந்தரமூர்த்தி, பாலா உள்ளிட்ட பொறுப் பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மாலை 5.30 மணியள வில் ஜெயங்கொண்டம் எழில் டயர்ஸ் வளாகத்தில் கழகக் காப்பாளர் சி.காமராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா ஒன்றிய தலைவர் அ.சேக்கிழார், ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன், நகர செயலாளர் கே.எம்.சேகர், லெ.அர்ச்சுணன், கா.பெரியார் செல்வன் தா.பழூர் ஒன்றிய பொறுப் பாளர்கள் சிந்தாமணி இராமச்சந்திரன் உதய நத்தம் சி.தமிழ் சேகரன், கீழப்பழுவூர்அன்பரசன் ஆகியோர் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பது குறித்தும் பயண வசதிகள் குறித்தும் கலந்துரையாடி அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும்என தீர்மானிக் கப்பட்டது.