சென்னை, அக்.1 சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது முகப்பு சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
கட்டுமான பணி
சென்னை பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் மிகப் பெரிய வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளில் 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர் கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அந்த வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது இதில் –- சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்களும், மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச் சைக்காக ஸ்டான்லி அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். அதில் பலர் நிைலமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து தொடர்பாக மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது இங்கு நடைெபறும் கட்டுமான பணியில் 3,200 தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது 45 அடி உயரத்தில் பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக பெல் (BHEL) நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்தத்தாரர்கள் என்று கூறினார்.