ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

புதுடில்லி, அக்.1- ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 1-ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்ெகனவே அறிவித்திருந்தது.

அதன்படி அரசின் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்ர மணியன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘தமிழ்நாட்டில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 458 பேர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் பல்வேறு ஆசிரி யர்கள் தகுதியற்றவர்களாக மாறி விடுவார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இந்த தீர்ப்பு அடிப்படை கல்வி உரிமையை பறிப்பதாகி விடும். எனவே தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லையா?

கரூர், அக்.1 கடந்த 27.9.2025 அன்று கரூரில் விஜய் யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இதனிடையே கரூர் நெரிசலில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று இணையத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு 6 அய்சியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *