பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடியாக சரிவு

புதுடில்லி, அக்.1 பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பீகாரில் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் 65 லட்சம் வாக் காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தன. பெயர் விடுபட்டவர்கள்,உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 1ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது விவரங்களை இணையத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை தீவிர திருத்தத்துக்குப் பின் 7.42 கோடியாக சரிந்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு முன்பு பீகாரில் 2024 ஜூனில் 7.89 கோடியாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில், 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பீகாரில் 3 மாதங்களாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையால் 68.5 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *