ஓசூர், செப். 30- தந்தை பெரியார் 147 அன்று பிறந்த நாளன்று மாவட்ட கழகம் சார்பில் ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் மாநகர தலைவர் து.ரமேஷ் தலைமையில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பாகலூர் சாலையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் தலைமையில் மாலை அணிவித்து சமுக நீதி உறுதிமொழி எடுத்தனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் அ.கிருபா,மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன்,ஆர்.நீலகண்டன் (மாவட்ட பொறுப்பாளர் காங்கிரஸ்), திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் தினேஷ்,மாமன்ற உறுப்பினர்கள் தேவி மாதேஷ், பாக்கியலட்சுமி, திமுக வட்ட செயலாளர் வடிவேல் (மாநில பொறியாளர் அணி துணைத் அமைப்பாளர் திமுக), ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி,நல்லூர் ஊராட்சி மேனாள் உறுப் பினர் கலைச்செழியன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்ரு, சத்தியமூர்த்தி, ஈரோடு பாண்டியன், சுரேஷ்,சிவாஜி, காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் மற்றும் திரளான திமுகவினர் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.