இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20 விழுக்காட்டை எட்டியது

1 Min Read

இந்​தி​யா​வில் முதல் முறை​யாக கார்ப்​பரேட் தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் எண்​ணிக்கை 20 விழுக்காட்டை எட்​டி​யுள்​ளது.

இதுதொடர்​பாக நியூ​யார்க்கை சேர்ந்த அவதார்​-செ​ராமவுண்ட் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலைமை பொறுப்​பு​களில் 2016இல் 13 விழுக்காடாக இருந்த பெண்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து 2024இல் 19விழுக்காடு அளவுக்கு உயர்ந்​தது. இந்த நிலை​யில் தற்​போது தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் பங்கு முதல் முறை​யாக 20 விழுக்காட்டை தொட்​டுள்​ளது. இது சமூகத்​தில் முற்​போக்​கான நிலையை பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது. உலகம் முழு​வதும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலை​மைப் பதவி​களில் பெண்​களின் பங்கு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. அதன்​படி இந்த எண்​ணிக்கை 2020இல் 14 விழுக்காடு, 2021இல் 15 விழுக்காடு, 2022இல் 17 விழுக்காடு, 2023இல் 19 விழுக்காடு, 2024இல் 19 விழுக்காடாக இருந்​தது. சிறந்த நிறு​வனங்​களில் மொத்த பணி​யாளர்​களின் அடிப்​படை​யில் பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வம் 35.7விழுக்காடு -ஆக நிலை​யான​தாக இருந்​தது. குறிப்​பாக, தொழில்​முறை சேவை​கள் துறை​யில் பெண்​களின் பங்கு 44.6 விழுக்காடு என்ற அளவில் அதி​க​மாக உள்​ளது. இதைத் தொடர்ந்​து, அய்டிஇஎஸ் (41.7விழுக்காடு), மருந்து (25 விழுக்காடு), எப்​எம்​சிஜி (23 விழுக்காடு), உற்​பத்தி (12 விழுக்காடு) ஆகிய துறை​கள் உள்​ளன.

இந்​தி​யா​வில் பெண்​களுக்​கான சிறந்த நிறு​வனங்​கள் பட்​டியலில் 125 நிறு​வனங்​கள் இடம் பெற்​றுள்​ளன. அவற்​றில் 15 விழுக்காடு அய்டி சேவை நிறு​வனங்​கள், 9 விழுக்காடு உலகளா​விய திறன் மய்யங்​கள். உற்​பத்​தித் துறை 9 விழுக்காட்டை​யும், மருந்​துகள் மற்​றும் நுகர்​வோர் பொருட்​கள் தலா 5 விழுக்காட்டையும் கொண்​டுள்​ளன. இந்​தி​யா​வில் பெண்​களுக்​கான முதல் சிறந்த 10 நிறு​வனங்​களில் அக்​சென்​ஸர், ஆக்ஸா எக்​ஸ்​எல் இந்​தியா பிசினஸ் சர்​வீசஸ், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ் வேதாந்தா லிமிடெட், ஈஒய், கேபிஎம்​ஜி, மாஸ்​டர்​கார்டு இன்​கார்​பரேஷன், ஆப்​டம் குளோபல் சொல்​யூஷன்ஸ் (இந்​தி​யா) பிரைவேட் லிமிடெட், ப்ராக்​டர் & கேம்​பிள், டெக் மஹிந்​தி​ரா, விப்ரோ ஆகியவை அடங்​கும். இவ்​வாறு ஆய்​வில் கூறப்​பட்​டுள்​ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *