சென்னை, செப்.30 சென்னை யில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக ரோசிப் பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன் றக் கூட்டம். மேயர் ஆர்.பிரியா தலை மையில், துணைமேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுரு பரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (29.9.2025) நடை பெற்றது. கூட்டம் தொடங்கியதும் கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அனை வரும் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி உறுப்பினர்கள் பலர் நாய் தொல்லையைக் கட்டுப் படுத்த வலியுறுத்தினர். மைக் ரோசிப் பொருத்தும் பணியின் தற் போதைய நிலவரம் மற்றம் பயன் கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அளித்த பதில்:
மாநகராட்சி சார்பில் பிடிக்கப் படும் தெரு நாய்களுக்கு கருத் தடை அறுவை சிகிச்சை செய்யும் போது மைக்ரோ சிப், நாயின் உட லில் பொருத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத் தும் பணி அடுத்த வாரம் தொடங் கப்பட உள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் நாய்களின் இனப்பெயர், அங்க அடையாளம், உரிமையாளர் பெயர் ரேபிஸ் நோய்க்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விவரம் உள்ளிட்டவை பதிவு செய்யப் படும். மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு,
திரு.வி.க.நகர், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை. மீனம் பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை மய்யங்கள் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. அங்கு கொண்டுவரப்படும். வீட்டு நாய் களுக்கும் மைக்ரோசிப் பொருத் துவது. ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இலவச மாக மேற்கொள்ளப்படும். அண் மைக்காலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்ரக நாய்களை ஆசை யாக வாங்கிவிட்டு, பராமரிப்புச் செலவு அதிகமாக இருப்பதை உணர்ந்து அவற்றை தெருவில் விட்டுவிடுகின்றனர் வளர்ப்பு நாய் களுக்கு சிப்களை பொருத்தும் போது. இதுபோன்று வளர்ப்பு நாய் களை தெருவில் விடுவது யார் வனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.