சிவகங்கை, செப். 29- செப்டம்பர் 27 (1923 – 2025) – சுயமரியாதைச் சுடரொளி, சமூக சேவகியும், முதல் நகர் மன்ற பெண் உறுப்பினருமான அம்மா இராமலக்குமி சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா (1925 – 2025) 27.09.2025 அன்று காலை 10.00 மணி அளவில் சிவகங்கை சண்முகநாதன், இராமலக்குமி அம்மாள் அவர்களின் நினை விடத்தில் கொண்டாடப் பட்டது. இது ஒரு கொள்கை விழாவாக கொண் டாடப்பட்டது.
இவ்விழாவில் தமிழ் அறிஞர், புலவர் பகீரத நாச்சியப்பன் கலந்து கொண்டு சுயமரியாதைச் சுட ரொளிகள் இராமச்சந்திரனார் முதல் அம்மா இராமலக்குமி அவர்கள் வரை, அவர்கள் செய்த சமூக சேவை, சுயமரியாதை இயக்கத்தில் அவர்கள் காட்டிய அளப்பரிய ஈடுபாடு மற்ற பல செய்திகளை சொல்லி, வந்திருந்த அனைவருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார்.
கொள்கைக் குடும்பத்தின் அய்ந்தாம் தலைமுறை பெரியார் பிஞ்சுகள் பெயர்த்தி இனியா, பெயரன் நிவன் ராஜசுந்தர பாண்டியன் ஆகி யோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, பெரியார் பெருந் தொண்டர் வேம்பத்தூர் க. வீ.செயராமன், திராவிடர் கழக ஒக்கூர் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், பகுத்தறிவாளர் கழக சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் சு.செல்லமுத்து ஆகியோர் நினை விடத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.