திருவெறும்பூர், செப். 29- திருச்சி, திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் மாதம்தோறும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மாதந்தோறும் புதியவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
அந்த வகையில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி ஓராண்டு நிறைவு 28.9.2025 அன்று நடைபெற்றது. தலைமை: சவு.சந்திரன், முன்னிலை: மு.ஆன்டிராஜ், வரவேற்புரை: ஆ.அசோக் குமார். தூய்மைப் பணியா ளர்களை நிரந்தரம் செய்யக்கூடாது, ஏன்? என்கிற தலைப்பில் பாரத மிகுமின் நிறுவன ஊழியர், தோழர் சி.பஞ்சலிங்கம் உரை யாற்றினார். “தனக்கான முதல் மேடை எனவும், முதல் வாய்ப்பு எனவும் தொடங்கிய அவர், சிந்திக்கக் கூடிய கருத்துகளை முன் வைத்துப் பேசினார்.
நிறைவாகத் தோழர் ஆன்டிராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், க.புனிதா, ப.கவு.யாழினி, ஆ.பாண்டிக்குமார், பி.இர.அரசெழிலன், அ.சிவானந்தம், விடுதலை கிருட்டிணன், சி.கனகராஜ், ம.சங்கிலிமுத்து, கரு.புனிதவதி, அ.அன்புலதா, அ.தமிழ்க்கவி, போ.ஜெகதீஸ் வரன், ரா.நவீன்குமார், ச.கணேசன், எழில்புத்தன், மே.ச.குகன், ஆர்.குமாரவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.