புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு

2 Min Read

இந்தியா, தமிழ்நாடு

புதுடில்லி, மே 25 – புதிய நாடாளு மன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத்  தலைவர் புறக்கணிக் கப்பட்டுள்ளார் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசமைப்பு சட்டமே அதைத் தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டியுள்ள நிலையில், அதன் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. 

திட்டமிட்டே உள்நோக்கத் தோடு குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை வி.சி.க கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய நாடாளு மன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசுத் தலைவரும் அழைக்கப்படவில்லை.

இது திட்டமிட்டு செய்த நடவ டிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ஆம் தேதி என்பது சாவர்க் கரின் பிறந்த நாளாக உள்ளது.

சனாதான தர்மத்தை நிலை நாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் நாடா ளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம்.

இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவரும் அழைக்கப்பட வேண் டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். 

கருநாடக தேர்தல் முடிவுகள் 

அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும்.

மோடி அரசுக்கு கருநாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கருநாடகத்தில் ஹிஜாப் பிரச் சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுபடுத்தும் நட வடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந் துக்கள் தான் பா.ஜ.க தோல்வி அடைய செய்தார்கள். 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும். 

முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக் கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதனவாதிகளுக்கு தான் வலு சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *