டிசம்பர் மாதம்
விண்ணில் ஏவப்படுகிறது
சென்னை, செப். 29- ககன்யான் திட்டத் திற்காக டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆள் இல்லாத ராக்கெட்டில் உள்ள விண்கலத்தில் பெண் ரோபோ வியோ மித்ராவை ஒருங்கிணைக்கும் பணியில் ககன்யான் குழு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.
பெண் ரோபோ
இந்திய ஆராய்ச்சி விண்வெளி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, வருகிற டிசம்பர் மாதம் ஆள் இல்லாத ‘ககன்யான் ஜி1 என்ற ‘காப்ஸ்யூல்’ விண்கலம் விண்ணில் ஏவப்படு கிறது. இதில், திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் ஏவுதள வாகனங்கள் மற்றும் விண்கலத் திட்டங்களுக்கான ‘இன்டர் ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்’ (அய்.அய்.எஸ்.யு.) உருவாக்கிய மனித உருவ பெண் ரோபோவான ‘வியோமித்ரா’வை (விண்வெளி நண்பன்) அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்) மூலம் இயங்கும் இந்த ரோபோ மனித பிரதிநிதியாகச் செயல்படும். இது இந்தியாவின் மிகவும் லட்சிய விண்வெளி திட்டமாகும்.
ககன்யான் திட்டத்தை வழி நடத்தும் இஸ்ரோவின் மனித விண்வெளி பயண மய்யத் திற்கு வியோமித்ரா அனுப்பப்பட உள்ளது.
இந்தி-ஆங்கிலத்தில் தொடர்பு
இந்த பெண் ரோபோவிற்கு செயல்பாட்டு கால்கள் இல்லாவிட் டாலும், ரோபோ தலை, உடல் மற்றும் கைகளுடன் அரை மனித உருவமாக இருக்கும். விண் ணில் உள்ள நுண் ஈர்ப் புவிசை நிலைமைகளுக்கு ஏற்ப இது பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 200 மில்லி மீட்டர் x 200 மில்லி மீட்டர் அளவுகளில் 800 கிராம் எடையுள்ள மண்டை ஓடு, வெப்பத்தை எதிர்க்கும் இலகுரக அல்சி 10 மில்லி கிராம் அலுமினிய அலாய் மூலம் கட்டப்பட்டுள்ளது. கட்டளைகள், பணி முக்கிய கட்டுப்பாடுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் உள்ளது.
மனிதனுடன் விண்ணில் பாயும்
விண்ணில் ராக்கெட் நடை முறைகளை பகுப்பாய்வு செய்தல், காற்றழுத்தம், வெப்ப நிலை போன்ற சுற்றுச்சூழல் அளவுருக்களைக் கண்காணித்தல் மற்றும் பணித் தரவைக் கண்காணிக்க சிறப்பு சென்சார்களை ரோபோ எடுத்துச் செல்கிறது. மொத்தத்தில் இந்த ரோபோ ஒரு மனித விண்வெளி வீரரை போல் செயல்படும்.
வருகிற 2027-ஆம் ஆண்டு ‘ககன்யான் திட்டம்’ மனிதனுடன் விண்ணில் ஏவப்படும் போது, தற்போது ரோபோ தெரிவிக்கும் பல தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.