திருச்சி, செப். 29- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா 25.09.2025 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர்அரசு மருத்துவமனையின் மருந்தாளுநர் க.அ.ச. முகமது ஷபீஃக் கலந்து கொண்டு மருந்தா ளுநர்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அவர் தமது உரையில் ,
பன்னாட்டு மருந்தியல் கூட்டமைப்பு (FIP) 1972இல் உருவாக்கப்பட்ட நாளான செப்டம்பர் 25ஆம் தேதியே மருந்தாளுநர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றும், 2009ஆம் ஆண்டு முதல் உலக மருந்தாளுநர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்து 2010ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் மருந்தாளுநர் நாள் கொண்டாடப்படுகிறது. நலவாழ்வுத் துறையில் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தெரிந்த அளவிற்கு மருந்தாளுநர்கள் தெரிவ தில்லை என்றும் ஆனால் மருந்துகளை கையாளும் மருந்தாளுநர்களைத்தான் பொதுமக்கள் சுலபமாக அணுக முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கரோனா பாதிப்பு காலத்தில்…
கரோனா என்ற பேரிடர் காலத்தில் மருந்தாளுநர்களின் தேைவ யையும் பெருமையையும் உலகம் அறிந்தது. மருந்துகளும் தடுப்பூசிகளும் இல்லையென்றால் மனிதர்களின் நலவாழ்வு கேள்விக்குறியாகிவிடும். உயிர் காக்கும் துறையில் இருக்கக்கூடிய மருந்தாளு நர்கள் சரியான நேரத்தில் சரியான மருந்துகளை சரியான நபருக்கு கொடுப்பது தொடர்பாக Right person, Right drug, Right dose, Right time, Right route, Right response மற்றும் Right documentation என்ற 7R கொள்கையினை கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கியுள்ளது.
பொறுப்புணர்வோடும்…
அதன்படி ஒவ்வொரு மருந்தாளுநரும் பொறுப்புணர்வோடும் கடமையுணர்வோடும் பணியாற்ற வேண்டும். மேலும் மருந்துகளை தயாரிப்பவர், பராமரிப்ப வர், முடிவெடுப் பவர், மேலாளர், வாழ்நாள் முழுவதும் கற்பவர், தலைவர், கல்வியாளர் என்ற பன்முகத்தன்மைகளை கொண்ட மருந்தாளுநர் களின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு பறைசாற்று வதற்காகவும் நலவாழ்வுத் துறையில் மருந்தாளுநர்கள் மிக முக்கிய பங்கு வகிக் கின்றனர் என்பதனை அறிவிக்கவுமே மருந்தாளு நர் நாள் கொண்டாடப்படு
கின்றது.
இதனை இவ்வாண்டிற் கான மருந்தாளுநர் நாள் கருப்பொருள் “Think Health, Think Pharmacist” நமக்கு நன்கு விளக்குகின்றது. வலியோடும் பெரும் துயரத்தோடும் நம்மை அணுகக்கூடிய பொதுமக்களுக்கு உள்ளார்ந்த சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றுவது மருந்தாளுநர்களின் முக்கிய கடமை’ என்று உரையாற்றி அனை வருக்கும் மருந்தாளுநர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
விழிப்புணர்வு சுவரொட்டிகள்
இந்நிகழ்ச்சியில் தேசிய மருந்து கண்காணிப்பு வாரத்தையொட்டி (17
முதல் 20, செப்டம்பர் 2025) நடைபெற்ற இணையவாயிலான சுவரொட்டி (e – poster presentation) சமர்ப்பித்தல் போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் 16 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 69 விழிப்புணர்வு சுவரொட்டி கள் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பின் முதன் மையர் முனைவர் சு. கற்பகம் குமர சுந்தரி நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.