மிஸ்ஸிசாகா, செப்.28 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (27.09.2025) காலை, மிஸ்ஸிசாகா நகரின் எரிண்டேல் பூங்காவில் ‘பெரியாருக்கான ஓட்டம்’ “Run/Walk for Periyar” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து வந்திருந்த கோ. கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு & சமூக நீதி கண்காணிப்புக் குழு – தமிழ்நாடு அரசு) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு, பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம் – கனடா சார்பாக “விடுதலை களஞ்சியம்” நூல் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
அதே போன்று கோ. கருணாநிதி தாம் எழுதிய “THOUGHTS OF PERIYAR” நூலையும், மோ.அருண் ஆக்கத்தில் வந்துள்ள குழந்தைகளுக்கான ’பெரியார் தாத்தா’ காமிக் புத்தகத்தையும் வழங்கினார்.
இந்நிகழ்வுக்கு, தோழர்கள் குடும்பங்களுடன் (பெரியார் பிஞ்சுகள்) வந்து உறுதுணையாக இருந்தனர். அனைவரின் பங்களிப்பால் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறியது.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஆசிப் மற்றும் கனடா வாழ் தோழர்கள் இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோ.கருணாநிதி அவர்களின் பதிவு: கனடா – ‘Run/Walk for Periyar’, என் இளைய மகன் அறிவுடன் இணைந்து, பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம், கனடா அமைப்பின் “Run/Walk for Periyar” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி! இந்நிகழ்வு, பெரி யாரின் சிந்தனைகளை போற்றி யதுடன், அவரது விழைவுகளை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லும் எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தியது.
– கோ. கருணாநிதி, 28.9.2025