‘விவசாயிகளை தொழில் முனைேவாராக உருவாக்குவோம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, செப். 28– விவசாயிகளை தொழில் முனை வோராக மாற்றி புதிய ஏற்றுமதி யாளர்களாக உருவாக்குவோம் என்று சென்னையில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார் பில் இரண்டுநாள் வேளாண் திருவிழா மற்றும் வேளாண் கண் காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று (27.9.2025) தொடங்கியது. இவ்விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 200 அரங்குகள் அடங்கிய கண் காட்சியையும் பார்வை யிட்டார்.

அதன்பின் முதல மைச்சர் பேசிய தாவது: தமிழ்நாடு வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து வருகிறது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை முன்பைப் போல அல்லாமல் தாமதமின்றி குறித்த நாளில் திறந்து வருகிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் ஹெக்டரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 28,494 ஏக் கர் கூடுதலாகும். இதற்கு தேவையான உரங்களை, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதம ருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்திய அளவில் முதலிடம்

கடந்த 4 ஆண்டுகளில் 456.44 லட்சம் டன் உணவு தானிய உற் பத்தியை எட்டியிருக்கிறோம். பயிர் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் முதலிடம். மக்காச் சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தியில்இரண் டாம் இடம். குறு தானியங்கள் மற் றும் நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளோம். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ மூலம் கடந்த 4 ஆண்டுகளில், 10,187 கிராம ஊராட்சிகளில், 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத் தில், இதுவரை 20 லட்சம் விவ சாயிகள் பயனடைந்துள்ளனர்.

பொருளீட்டுக்கடன்

கடந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகபட் சமாக 130 லட்சம் டன் வேளாண் விளைபொருட் கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய் யப்பட்டுள்ளது. விவ சாயிகளின் பொருளீட்டுக் கடன் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த் தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத் தில், மஞ்சள் ஏற்றுமதி மய்யம், 14 புதிய உழவர் சந்தைகள், நீலகிரியில் சிறுதானியங்கள் பதப் படுத்தும் நிலையம், கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம், தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்புக் கூட்டு மையம், களக்காட்டில் வாழை ஏல மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க மானியம்

மேலும், உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.53 கோடி மானியம் வழங்கப்படுகிறது. கங்கை கொண்டானில் மெகா உணவுப் பூங்கா. ‘தமிழ் நாடு முந்திரி வாரியம்’, இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட 21 லட் சம் விவசாயிகளுக்கு ரூ.1,630 கோடி நிவாரணம், பயிர்க்காப்பீட் டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசா யிகளுக்கு ரூ.5,720 கோடி இழப் பீடு, நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய அரசு வேளாண் கல்லூ ரிகள் அமைப்பு போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள் ளோம். விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி புதிய ஏற் றுமதியாளர்களாக உருவாக்கு வோம். இவ்வாறு பேசினார். விழாவில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம். கே.என். நேரு, தா.மோ.அன்பரசன், கோவி.செழியன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *