கரூரில் இருந்து வரும் நெஞ்சைப் பிழியும் செய்திகள் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்து கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத கோரம் இது.
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், காவல்துறை விதித்தக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றியிருந்தால் இத்தகைய பேரிழப்புகள் ஏற்பட்டே இருக்காது. பல முறை எச்சரித்தும், நீதிமன்றமே கண்டித்தும் கூட கட்டுப்பாடு காக்கத் தவறியதன் விளைவை, இத்தனை உயிர்களை விலையாகக் கொடுத்தா காண்பது?
உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. உயிர்களைக் காப்பதே இப்போது நம் முதல் கடமை!
கூட்டம் காட்டுவது மட்டுமே அரசியல் அல்ல என்பதை இவ்விழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இனியேனும் உணரட்டும்!
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கவியலாத இழப்பில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலை எப்படித் தருவது என்று தெரியாமல் தவிக்கிறோம்.
நாள்: 27.9.2025 தலைவர்,
நேரம்: இரவு 9 மணி திராவிடர் கழகம்