புதுடில்லி, நவ.10 உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் பணியாற்ற அனுமதி உள்ளது. இதில் மூன்று இடங்கள் காலியாக இருந்தன.
இந்த இடங்களுக்கு மூன்று உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் பெயர்களை கொலீ ஜியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண் டுள்ளது.
இதையடுத்து, புதுடில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மேஷியா, கவுஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர், உச்சநீதிமன்ற நீதிபதி களாக நியமிக்கப்பட்டு உள்ள தாக ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் று அறிவித்தார். புதிய நீதிபதிகள் மூவ ருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடம் முழுமை யாக நிரப்பப் பட்டுள்ளது.