செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘ரெயின் ட்ராப் போட் – ஹவுஸ்’ அமைந்துள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து, சுற்றுலாப் பயணியர் அதிக அளவில் வருகை தருவர். இங்கு, சென்னை அய்.அய்.டி., சார்பாக, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் பெறும் இயந்திரம் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த இயந்திரம் 2.3 மீட்டர் உயரமும், 1 டன் எடையும் கொண்டது. மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுகிறது. காற்றோட்டத்திற்கு ஏற்ப, 700 முதல் 1,000 லிட்டர் வரை, தினசரி குடிநீர் தயாரிக்கப்படும். இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு, விரைவில் சுற்றுலாப் பயணியரின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.