இந்தியாவில் இறுமாப்பு நீளுகின்றது
இந்திதானே வேண்டுமெனத் துடிக்கின்றது
இந்தியா என்றிங்கு நாடேயில்லை
இயம்புவதால் எவருக்கும் இலாபமில்லை
வந்துற்றப் பார்ப்பானே உயந்திருக்கான்
வாழ்ந்திட்ட நற்றமிழர் கீழிருக்கான்
இந்தமுறைதானே இருக்குத்தம்பி : இது
எவருக்கோ முன்னுரிமை இதனைநம்பி
முன்னுரிமை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பானுக்கே
முழுஉரிமை வேலைகளும் சொந்தமென்றால்
சிந்தனையில் தடித்தனமே உனக்கிருக்கு
சீர்மைபெற விரும்பாத மனக்கிறுக்கு
உந்தனையே நீஎண்ணிப் பார்க்கவில்லை
உரிமைகளைச் சொன்னாலும் ஏற்கவில்லை
மந்தப்புத்தி மடையனாக நீயிருந்தால்
மரியாதைக் கெட்டேதான் வாழவேண்டும்
உழைப்பெல்லாம் நீயேதான், ஆனால்
உருப்படியாய் ஏனில்லை? எண்ணிடுநீ
பிழைப்பெல்லாம் எவனுக்கோ சேர்க்கிறாயே
பின்னடைவாய் நீயேதான் இருக்கிறாயே!
தழைப்பது திராவிடத் தொன்மைதானே
தன்மானம் இல்லாது வாழலாமா?
சழக்கர்களின் திமிரடக்க எழுகவேண்டும்.
சரித்திரமாய் எல்லோரும் ஆகவேண்டும்
தந்திரமாய் பார்ப்பனரே ஆளுகின்றார்
தறுதலைகள் நாமெல்லாம் வாக்களித்து,
வந்திருக்கும் இடர்ப்பாடு அறியவில்லை
வழிவகைகள் சொன்னாலும் ஏற்கவில்லை
தந்தைபெரியாரும் இடித்துரைத்தார்; நம்
தமிழ்நாடு நமதென்று சொல்லிப்பார்த்தார்
சிந்தனைகள் பக்கத்தில் செல்லவில்லை
சிறப்போடு வாழ வழித்தெரியவில்லை
எத்தனைநாள் எல்லோரும் சொல்லவேண்டும்?
இதுவேதான் தமிழர் மாண்பா?
பித்தனைப்போல் இன்னுமா வாழலாகும்?
பிணிநீக்கி வாழவே மானமில்லையா?
எத்தர்களும் பித்தர்களும் வாழ்வதென்றால்,
எத்தனை ஆண்டாகும் வாழ்வுனக்கு?
பத்திரமாய் மனிதர்களாய் வாழ்கிறாயா?
பயனுண்டா இந்தியாவில் இருப்பதாலே?
– கவிஞர் ச. வெண்மணிஅழகன் க.மு;