இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா மூன்றாவது முறையாக தேர்வு

புதுடில்லி, செப்.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று  (25.9.2025) நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டி.ராஜா தேர்வு

பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி கடந்த 2019-இல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த பதவிக்கு டி.ராஜா தேர்ந்தெடுக் கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், 2022-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் டி.ராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 3-ஆவது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும் என்ற வரம்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விதியில் இருந்து டி.ராஜாவுக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 76 வயது ஆகும் நிலையிலும், பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்ட ஒரே உறுப்பினர் டி.ராஜா ஆவார்.

பீகார் சட்டப்பேரவைக்கு விரை வில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் வலுவான உறவை கொண்டிருக்கும் டி.ராஜா, தலைமைப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என பீகார் மாநில கட்சித் தலைமை வாதிட்டது. தொடக்கத்தில் இப்பதவிக்கு கேரளாவின் பினோய் விஸ்வம் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவர் மாநில அரசியலில் நீடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர் டி.ராஜா. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2007 மற்றும் 2013-ஆம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *