டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜாதிக்கு எதிரான போராட்டம் திராவிட இயக்கத்தை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக என்றும் பாடுபடுவோம்; உறுதுணையாக நிற்போம், ராகுல் பேச்சு.
* “தமிழ்நாட்டில் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப் படும் காலை உணவு திட்டம் சிறப்பானது.. அதை தெலங்கானாவிலும் அமல்படுத்த போகிறோம்!” முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்பு
தி இந்து:
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற வரம்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விதியில் இருந்து டி.ராஜாவுக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அஞ்சல் வாக்கு எண்ணும் நடைமுறையில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி. இதன்படி, மின்னணு இயந்திர வாக்குகள் கடைசி இரண்டு சுற்றுகள் எண்ணுவதற்கு முன்பு தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு மீதான 50% உச்சவரம்பு மற்றும் தனியார்த் துறை ஒதுக்கீட்டை நீக்குதல் ஆகியவற்றை தீவிரமாக ஆதரித்த பிறகு, காங்கிரஸ், ஜாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகளுக்கு உத்தரபிரதேச அரசின் தடையை சாடுவதன் மூலம் “சமூக நீதி” தளமாக தனது புதிய முத்திரையை நிலைநாட்டியுள்ளது.
– குடந்தை கருணா