அக்டோபர் 4-ஆம் நாள் செங்கை மறைமலை நகர் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் திராவிடர் இன எழுச்சிப் பேரணியில் திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை தோழர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
பங்கேற்கும் மகளிர் வெள்ளை ரவிக்கையும், கருப்பு (வேறு எந்த நிறமும் கலக்காத) நிறப் புடவையும், அல்லது சுடிதார் அணிபவர்கள் கருப்பு மேல் உடையும், வெள்ளை நிறத்தில் கால் சட்டையும், மேல் துணியும் (துப்பட்டா) அல்லது கருப்புச் சட்டையும் வெள்ளை கால் சட்டையும் அணிந்து வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்