பெரம்பலூர், செப்.25- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21.09.2025 அன்று மருத்துவர் குணகோமதி மருத்து வமனை வளாகத்தில் காலை 10.30 மணியளவில் தங்கராசு தலைமையில், விசயேந்திரன் வரவேற் புரையோடு நடைபெற்றது.
தீர்மானங்கள்:
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு குடும்ப த்தோடு செல்லுதல் என்றும், பெரியார் உலகத்திற்கு நன்கொடைஅளித்தல் சம்பந்தமாகவும், கழக உறுப்பினர்களின் பங்களிப்பு, பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் எனும் நிகழ்வினை ஒன் றியங்கள் தோறும் நடத்தி இளைஞர்களையும், மாணவர்களையும் பெருமளவில் சேர்த்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அக்ரி ஆறுமுகம், நடராசன், சின்னசாமி,தாரணி, இராமு,காளிதாசன், அண்ணாதுரை, அறங்கைய்யா,சர்புதீன், இரவிக்குமார், தமிழினியன், தினேசு போன்றோர் கலந்து கொண்டனர். சின்னசாமி நன்றி யோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.