பெங்களூரு, செப்.25 பெங்களூரு வில் உள்ள மோசமான சாலைகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த கருநாடக துணை முதல மைச்சர் டி.கே. சிவகுமார், “டில்லியில் பிரதமரின் இல்லம் அமைந்துள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன. இது நாடு தழுவிய பிரச்சினை, ஆனால் ஊடகங்கள் கருநாடகாவை மட்டுமே காட்டுகின்றன,” என்று கூறினார்.
கருநாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் வீட்டின் அருகே
சாலையில் பள்ளம்
பெங்களூருவின் சாலைகளை மேம்படுத்த தங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார். “நான் அண்மையில் டில்லியில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கே பிரதமரின் இல்லம் உள்ள சாலையில் எத்தனை பள்ளங்கள் உள்ளன என்பதை ஊடகங்கள் பார்க்க வேண்டும். மோசமான சாலைகள் என்பது நாடு முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை,”
பாஜக மற்றும் ஊடகங்கள்மீது குற்றச்சாட்டு
முந்தைய பாஜக அரசின் ஆட்சியில் சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தால், இப்போது ஏன் இப்படி மோசமாக உள்ளன “இந்தியா முழுவதும் இதே நிலைதான். ஆனால், ஊடகங்கள் பெங்களூருவில் மட்டுமே இந்த நிலை உள்ளதாகக் காட்டுகின்றன. மழை பெய்தாலும் தினமும் ஆயிரக்கணக்கான பள்ளங்கள் நிரப்பப்படுகின்றன. நாடு முழுவதும் மோசமான சாலைகள் உள்ளதற்கு பாஜகவே காரணம்.
ரூ1,100 கோடி திட்டங்கள்
பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களை சரிசெய்ய நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்ததாரர்களுக்கு இறுதி காலக்கெடு வழங்கப்பட் டுள்ளது. மேலும், நகரம் முழு வதும் சாலை பழுது மற்றும் கட்டுமானத்திற்காக ரூ1,100 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. “எங்கள் இலக்கு சுத்தமான பெங்களூரு மற்றும் சீரான போக்குவரத்து,” இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூருவின் சாலைகளை “பள்ளங்களின் நகரம்” என்று ஒன்றிய அமைச்சர் எச்.டி. குமாரசாமி விமர்சித்ததும், மோசமான சாலை வசதிகளைக் காரணம் காட்டி பிளாக்பக் நிறுவனம் பெங்களூருவி லிருந்து இடம்பெயர உள்ளதாகக் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.