பாபநாசம் ஒன்றியத்தில் பெரியார் பிறந்தநாள் திருவிழா

4 Min Read

பாபநாசம், செப்.25 கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் 2025 செப்டம்பர் 17 காலை 10 மணி அளவில் பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம் ,ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சி தொடங்கியது.

தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனை பயனாளிகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்களுக்கும் ஆரஞ்சு பழங்கள் வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட பேரணியை அண்ணா சிலை யில் இருந்து பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் வி.மோகன் துவக்கி வைத்தார்.

பெரியார் பட ஊர்வலம் மேளதாள இசையுடன் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ராஜகிரி இமயம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ,கணபதி அக்கிரகாரம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் கழகத் தோழர்கள் தோழமைக் கட்சியைச் சார்ந்த திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாவை பைந்தமிழ் பேரவை மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் பொதுமக்கள் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்டு அண்ணா சிலை முதல் பெரியார் சிலை வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்.

தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றி யத் தலைவர் தங்க.பூவானந்தம், ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி, பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகு லேஷன் மேல்நிலைப்பள்ளி, திராவிடர் சமுதாய நல,கல்வி அறக்கட்டளை, கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியார் கல்வி, சமூகப் பணி அறக்கட்டளை, கபிஸ்தலம்,கணபதி அக்ரஹாரம் மணி மெட்ரிகுலேஷன் பள்ளி ,காமராசர் கல்வி அறக்கட்டளை, கணபதி அக்ரகாரம், ராஜகிரி இமயம் மழலையர் பள்ளி ஆகிய அனைத்து நிறுவனங்களின் சார்பாக அதன் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர்.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, மகளிரணி மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தோர், பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அனைத்து கட்சி நண்பர்க ளுக்கும் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அரசு அலுவ லகங்களுக்கும் அரசு மருத்துவமனை “மருத்துவப் பயனாளிகளுக்கும்” இயக்கத் தோழர்களுக்கும் இனிப்பு, காரம், தேநீர், பழங்கள் பிஸ்கட் மற்றும் தண்ணீர், வழங்கப்பட்டது.

சு.கலியமூர்த்தி ஒன்றிய செயலாளர் சமூக நீதி நாள் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து க. திருஞானசம்பந்தம், ப.க. மாவட்ட செயலாளர் மற்றும் ப.க.மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் வழங்கினார்கள்.

கு.ப. ஜெயராமன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்கள். பெரியார் பெருந்தொண்டர்கள் ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு போராளிகள் நாணல் காடு மணி, கலியபெருமாள் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

சிறப்புரையாக பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் வி.மோகன், பெரியாரின் தொண்டு உழைப்பின் சுவையைப் பெற்ற மக்கள் நன்றி உணர்வுடன் விழா எடுத்ததையும் அன்று நம்மிடம் இருந்த மூட நம்பிக்கை, இழிவுகளையும், துடைத்து மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என அய்யாவின் போராட்டங்கள் அனைத்தையும் விளக்கி செய்தியாளர்களின் சந்திப்பில் உரையாற்றி, கலந்து கொண்ட அனை வருக்கும் மற்றும் சமூக நீதி நாளாக அரசு கொண்டாட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” அவர்களின் அரசுக்கும் நன்றி தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

மோட்டார் சைக்கிள் பேரணி

பாபநாசத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட திருப்பாலைத்துறை கவி .கணேசன் அவர்களின் இல்லத்தில் இருந்து ‘‘இல்லம்தோறும் இயக்கக் கொடி’’ ஏற்றும் மோட்டார் சைக்கிள் பேரணியை  சு. துரைராஜ் (மாவட்ட செயலாளர்) மற்றும் வி.மோகன்ப.க.மாநில செயலாளர், ஒன்றிய செயலாளர் சு.கலி யமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்

வி.மதிவாணன் (நகர துணை செயலாளர்) இல்லம், மு.வீரமணி (நகர செயலாளர்) இல்லம், பகுத்தறிவு நகர் வினோத் இல்லம், ஆர்.எஸ். தோட்டம் கோவி.இ.ராஜீவ் காந்தி (பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோரின் இல்லங்களில் பாபநாசத்தில் இயக்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

கபிஸ்தலம்

சுயமரியாதைச் சுடரொளி  இ.கைலா சம் இல்லம், சீதாலட்சுமிபுரம் “சுயமரி யாதைச் சுடரொளி” தி.கணேசன் ஆகி யோர் இல்லத்தில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து இயக்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

கபிஸ்தலம் குடியானவத் தெரு  சு.கலியமூர்த்தி (ஒன்றிய செயலாளர்) இல்லத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இயக்கக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

காங்கேயம் பேட்டை இளவரசன் இல்லத்திலும், மு.சேகர் (பகுத்தறிவு கழக ஒன்றிய தலைவர்) இல்லத்திலும் இயக்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

கடைத்தெரு சாலை பிரிவில் திமுக மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் . நா.குணசேகரனால் அலங்கரித்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணி வித்து பொதுமக்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் இனிப்பு உருண்டை வழங்கப்பட்டது

வன்னியடி

நாணல் காடு தோழர் மணி, கலிய பெருமாள் ஆகியோரின் இல்லத்திலும் மணல்மேடு கோ.முத்துமீனா இல்லத்தி லும் வன்னியடி  உ.நாகராஜன் (பாவை நகர துணைத் தலைவர்) ஆகியோர் இல்லத்தில் இயக்கக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பும், தேநீரும் வழங்கப்பட்டது.

உள்ளிக்கடை

செங்குந்தர் தெருவில் உ.கார்த்திகே யன், குணசேகரன் ஆகியோர் இல்லத்தில் திராவிடர் கழகத்தின் கொடி ஏற்றி வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .

சுதர்மன் தெரு சு.துரைராஜ் (மாவட்ட செயலாளர்) இல்லத்தில் இயக்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு தேநீர் வழங்கப்பட்டது.

மாகாளி புரம்

பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம் இல்லத்திலும் இலுப்பகோரை வே. ராவணன் இல்லத்திலும் இயக்கக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அய்யம்பேட்டை நகரக் கழக தலைவர் அறிவழகன் மற்றும் சா .கண்ணன் முன்னிலையில்  வ.அழகுவேல் (மாவட்ட துணைத் தலைவர்) தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு “பெரியார் ஊழியன்” துரை. சக்கரவர்த்தி நினைவு படிப்பகத்தில் இனமான கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *