புதுடில்லி, செப். 25- காணா மல் போன குழந்தைகளை கண்டு பிடிக்கவும், அந்த வழக்குகளில் விசாரணை நடத்தவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கண் காணிப்பில் தனி இணைய தளம் உருவாக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொண்டு நிறுவனம்
குரியா ஸ்வயம் சேவி சன்ஸ்தன் என்றதொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், காணாமல் போன மற்றும் கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக் கப்படாமல் இருப்பது பற்றியும், ஒன்றிய அரசின் கண்காணிப்பில் செயல்படும் ‘கோயா’ இணைய தளத்தில் உள்ள தகவல்கள் அடிப் படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியிருந் தது. இடைத்தரகர்கள் மூலம் கடத்தப்பட்ட சிறுவர், சிறுமிகள் ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது பற்றி உத்தரப்பிரதேசத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒருங்கிணைப்பு இல்லை
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது:- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. இந்த பிரச்சினையில் அவர்களிடையே ஒருங்கிணைப்பு நிலவுவது அவசியம்.
மேலும், காணாமல் போன குழந் தைகளை கண்டுபிடிக்கவும், விசா ரணை நடத்தவும். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தனி இணையதளம் ஒன்றை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்.
சிறப்பு அதிகாரி
‘ஒவ்வொரு மாநிலத்திலும் இணையதளத்தை நிர்வகிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் காணாமல் போன குழந்தைகள் பற்றிய புகார்களை விசாரிப்பவராக இருக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஒன்றிய அரசிடம் இருந்து இது குறித்து அறிவுறுத்தல்களை பெறுமாறு ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பட்டியை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.