ஏன் இந்த ஓரவஞ்சனை? பிஜேபி ஆளும் பெரும்பாலான மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது பற்றாக்குறை பட்டியலில் தமிழ்நாடு – மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி செப்.24-  மாநில அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள 16 மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது. இதற்கு முன்பு பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் இருந்த உத்தரப்பிரதேசம் இப்போது உபரி வருவாய் மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2022-2023 நிதியாண்டில் உத்தர பிரதேசத்தின் உபரி வருவாய் ரூ.37 ஆயிரம் கோடியாக இருந்தது.

இந்தப் பட்டியலில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கருநாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.8,592 கோடி), தெலங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராகண்ட் (ரூ.5,310 கோடி), கோவா(ரூ. 2,399 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதுபோல, பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் இருந்த மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசமும் (ரூ.4,091 கோடி) உபரி வருவாய் மாநில பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் அருணாச்சல், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் உபரி வருவாய் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த 16இல் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் (2022-2023) வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பட்டியலில் ஆந்திர பிரதேசம் (-ரூ.43,488 கோடி), தமிழ்நாடு (-ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (-ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (-ரூ.27,295 கோடி), பஞ்சாப் (-ரூ.26,045 கோடி), அரியானா (-ரூ.17,212 கோடி), அசாம் (-ரூ.12,072 கோடி), பீகார் (-ரூ.11,288 கோடி), இமாச்சல பிரதேசம் (-ரூ.6,336 கோடி), கேரளா (-ரூ.9,226 கோடி), மகாராட்டிரா (-ரூ.1,936 கோடி) மேகாலயா (-ரூ.44 கோடி) ஆகிய 12 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *