டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்கலாமே? ஜிஎஸ்டி விவகாரத்தில் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
* 15 நாளுக்கு ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும் வாரத்தில் 4 நாள் தொகுதியில் தங்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு.
தி இந்து:
* பீகார் சட்டமன்ற தேர்தல்: புதன்கிழமை நடைபெறும் காங்கிரஸ் பணிக்குழு கூட்டத்தில், இந்தியா கூட்டணி மிகவும் பின்தங்கியோருக்கான (EBC) அறிக்கையை வெளியிட உள்ளது. இதில், பட்டியல் ஜாதி/பட்டியல் பழங்குடியினருக்கான அடக்குமுறை தடுப்புச் சட்டம் போன்று தனிச் சட்டம் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியும் இடம்பெறும்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* அமெரிக்காவின் எதிர்மறை நடவடிக்கைகள் குறித்து இந்திய வம்சாவளியினரின் மவுனத்துக்கு கண்டனம்:
* வெளிநாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு, அமெரிக்காவின் சமீபத்திய எதிர்மறை முடிவுகள் குறித்து இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் மவுனமாக இருப்பதை கண்டித்தது. அய்ந்து பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி குழுவுடன் இந்த விவகாரம் பகிரப்பட்டது. பிரதிநிதிகளை அமெரிக்க மக்களவையின் உறுப்பினரான அமி பேரா வழிநடத்தினார்.
– குடந்தை கருணா