செனாய் நகர், செப்.24- வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் 17.09.2025 அன்று சென்னை செனாய் நகரில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆம் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாமன்ற உறுப்பினர் மெடில்டா கோவிந்தராஜ் அவர்கள் இயக்கக் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு உணவு
மாநில கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்கள். நிகழ்வில் பங் கேற்ற அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வை மதன்குமார், கழகத் தோழர் மோகன், சட்டக் கல்லூரி மாணவர் பார்த்தீசுவரன், கழக மாவட்ட துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வில் விசிக மாவட்ட செயலாளர் வேலுமணி, கர்ணா பாண்டியன், ரஞ்சித் குமார், திமு கழகத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கே.பி.சுரேந்தர், குட்டி, மதி, டேனியல், பழனிவேல் ராஜன், பிரவீன் குமார், ப்ரித்வ், மதன், வழக்குரைஞர்கள் திவாகர், முரளிதரன், அமைந்தகரை வியா பாரிகள் சங்க பொறுப்பாளர் காளிமுத்து ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி பாசுகர், அரும்பாக்கம் சா.தாமேதரன், மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.பார்த்திபன், கண்மணி துரை ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.