சென்னை, செப்.23 இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா
நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு சென்னை கலைவாணா் அரங்கில் 21.9.2025 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மதம் என்பதை நிறுவனமாகப் பார்க்காமல் மார்க்கமாக பார்ப்பவா்கள் இஸ்லாமியா். அந்த மார்க்கம் அன்பு மார்க்கமாக இருக்க வேண்டும் என போதித்தவா் நபிகள் நாயகம். மேனாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டதே திருவாரூரில் நடைபெற்ற மீலாது நபி விழாவில்தான்.
ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தியவா் நபிகள் நாயகம். அதனால்தான் அவரது அன்பை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் புகழ்ந்தனா்.
1969-இல் மீலாது நபியை அரசு விடுமுறை நாயக கலைஞர்தான் அறிவித் தார். அதை அதிமுக ஆட்சியாளா்கள் ரத்து செய்ததும், திமுக அரசு மீண்டும் அதை நடைமுறைப்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட் டில் இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு, உருது பேசும் முஸ்லிம் களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீ காரம், சிறுபான்மையினா் நல வாரியம் என இஸ்லாமிய மக்களுக்காக திமுக அரசு முன்னெடுத்த திட்டங்களை பட்டியலிட்டால் நேரம் போதாது. இஸ்லாமிய கூட்டணி கட்சிகள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்.
இஸ்லாமியா்களுக்கு இடா் என்றால் துணைநிற்கும் முதல் அரசியல் இயக்கம் திமுகதான். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உண்மையாக போராடியது திமுக மட்டுமே. அந்தச் சட்டத்தால் எவருக்கேனும் பாதிப்பு இருந்ததா என கேள்வி கேட்டதும், போராட்டம் நடத்திய இஸ்லாமி யா்களுக்கு எதிராக தடியடி நடத்தியதும் யார் என அனைவருக்கும் தெரியும்.
அ.தி.மு.க. இரட்டைவேடம்
அதேபோன்று முத்தலாக் சட்டத் தின் போதும், வக்ஃபு சட்டத் திருத்தத்தின் போதும் அ.தி.மு.க. எவ்வாறு இரட்டை வேடம் போட்டது என்பதும் தெரியும். அதனால்தான் மேனாள் அமைச்சா் அன்வர்ராஜா போன்றவா்கள் துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளைப் புறக்கணித்து தி.மு.க.வில் இணைந்துள்ளனா்.
மற்றொருபுறம் தி.மு.க. முன்னெ டுத்து வரும் தொடா் சட்டப் போராட் டங்களால்தான் ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு கிடைக்கப்பெற்றது.
நல்லிணக்கம்
பாஜகவின் மலிவான அரசியலுக்கு துணைபோகிறவா்களைப் புறக்கணிக்க வேண்டும். இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கமாக திமுக இருக்கும். நபிகள் நாயகம் போதித்த அன்பு உலகெங்கும் பரவ வேண்டும். போர்களற்ற, வன்முறையற்ற, வெறுப்புகளற்ற, ஆதிக்கமற்ற உலகம் உருவாக வேண்டும். எங்கும் நல்லிணக்கமும், அமைதியும் உருவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா், நாடாளுமன்ற உறுப்பினா் நவாஸ் கனி, திமுக இலக்கிய அணித் தலைவா் அன்வா் ராஜா, இந்திய முஸ்லிம் யூனியன் லீக் தலைவா் காதா் மொஹிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜிவாஹிருல்லா, மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் தமீமுன் அன்சாரி, எஸ்டிபிஅய் கட்சித் தலைவா் நெல்லை முபாரக், தலைமை ஹாஜி முகமது அக்பா், தமிழ்நாடு உலமா சபை தலைவா் காஜா முயீனுத்தீன் பாகவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.