வைகுந்த்பூர் நவ.10 காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கதுறை, சிபிஅய், வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ. பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். சட்டீஸ்கர் மாநிலம், வைகுந்த்பூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (9.11.2023) நடந்த பிரச்சாரக் கூட் டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘ காங்கிரஸ் ஏழைகளுக்காக பாடுபடுகிறது. அதானி மற்றும் பணக்காரர்களுக்காக பா.ஜ. பாடுபடுகிறது. காங்கிரசை கண்டு மோடி அஞ்சுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பா.ஜ. பயன்படுத்துகிறது’’ என்றார்.
அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகள் மூலம் காங். வெற்றியை தடுக்க முயற்சி: பா.ஜ.மீது கார்கே குற்றச்சாட்டு
Leave a Comment