வயிற்றுக்கோளாறு, அல்சர் நோய் உள்ளவர் களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும், புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற வை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும்.
சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்று, சர்க்கரை நோய் பிரச்சினகள் இருப்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்சினை ஏற்படும். நோய்களுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்துகளின் காரணமா கவும் வாய் துர்நாற்றம் ஏற்படும். தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சினை ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவு நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே தங்கும் போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வரும். துர்நாற்றத்தை போக்கும் வழிகள்: வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமண பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். சூயிங்கம், மவுத் பிரஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். கிராம்பை மென்று வாயில் அடக்கி கொள்ளலாம். அரைலிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். எலுமிச்சைச் சாறுடன் நீர்கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டும் கொப்பளிக்கலாம். குடல் புண் பிரச்சினையால் தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். காைல, மாலை இரண்டு நேரமும் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும். அதிக காரம், அதிக புளிப்பு உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கொத்தமல்லிக்கீரையை வாயில் போட்டு மென்றுவர, வாய் துர்நாற்றம் நீங்கும்.
கிருமிகளால் தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொருமுறை பல் துலக்கும் போதும் நன் றாக பற்களில் பிரஷ் படும்படி தேய்க்க வேண்டும. பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தித் துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். இரவு நேரம் பணி புரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகம்.
கிராம்பு – சீரகம்: மிட் டாய்கள், பபுல்கம்கள் சாப்பிடுவதால் அதிக அளவில் எச்சில் சுரக்கும். இதனால் வாய் வறண்டு போகாது. எச்சில் வாயிலுள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். இதனால் துர்நாற்றம் குறையும். இதே போல கிராம்பு, சீரகம், போன்றவற்றை மெல்லலாம். உணவுக்குப்பின் கேரட், ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால் எச்சில் சுரப்பு அதிகமாகும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும்.