ஒசூர், செப். 22- ஒசூர் மாவட்ட கழக துணைச் செயலா ளர் இரா. செயசந்திரன்-இரா. சோ. ஞானசுந்தரி இணையரின் மகன் மருத்துவர் மில்லருக்கும் திண்டுக்கல் வேம்பார்பட்டி இரெ.நாராயணக்கண்ணன்-நா. உமையாள் இணையரின் மகள் மருத்துவர் நா. பத்மபிரியாவுக் கும் இணையேற்பு நிகழ்வை ஒசூர் மாவட்ட தலைவர் சு. வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர், கோ. கண்மணி, மாவட்ட மகளிர் பாசறை தலை வர் செ. செல்வி முன்னிலையில் பாவலர் அறிவுமதி தலைமை யேற்று தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அனைவரையும் மணமக்கள் வீட்டார் சார்பாக மணமகனின் தாயார் ஞானசுந்தரி வரவேற்றார்.
இணையேற்பு உறுதிமொழி
மணமக்கள் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் பொதுகுழு உறுப்பினர் அ.செ. செல்வம், பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவந்தி அருணாசலம் மணமக் களை வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா. சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ச. எழிலன் மாவட்ட துணைத்தலைவர் ப. முனுசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் அ. கிருபா, மாநகர தலைவர் து. ரமேஷ், செயலாளர் பெ. சின்னராசு, ஒன்றிய அமைப்பாளர் பொறியாளர் பூபதி, திருவையாறு சுரேஷ், திருவெட்டியூர் துரைஇராகவன், கரூர் சிவாஜி, பொறியாளர் ரகுவர்மா, வழக்குரைஞர் க.கா. வெற்றி, மகளிரணி தமிழ்ச் செல்வி, ஒசூர் மாநகராட்சி துணைமேயர் ஆனந்தையா திமுக, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், தமிழ் மைந்தர் மன்றம் நடவரசன், செம்பரிதி, தமிழ்தேச பேரியக்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் கோ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்கொடை
இணையேற்பு மகிழ்வாக மணமக்கள் திருச்சி பெரியார்-நாகம்மையார் இல்லத்திற்கு ₹2000 நன்கொடை வழங்கினர்.