21.9.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எச்1பி விசா கட்டணம் உயர்வு: மோடிக்கு டிரம்ப் அளித்த பிறந்தநாள் பரிசா?: உங்கள் ‘ஆப் கி பார், டிரம்ப் சர்க்கார்’ அரசிடம் இருந்து வரும் பிறந்தநாள் பரிசுகள் இதுதான்… எச்1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை மிகவும் பாதிக்கக் கூடியது. ஏனெனில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள். “மீண்டும் சொல்கிறேன். இந்தியா வலிமையற்ற பிரதமரை கொண்டுள்ளது” என ராகுல் எக்ஸ் தளத்தில் விமர்சனம்.
தி இந்து:
* பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க.வால் சாதிக்க முடியாததை தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் சாதித்தது: ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்கத் தவறிய போதிலும், திராவிட மாடல் அரசு 11.19% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்தது, இது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியை விட இரண்டு மடங்கு அதிகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரியங்கா காந்தி பீகாரில் பெண் வாக்காளர்களை மய்யமாகக் கொண்டு 10 நாள் ‘ஹர் கர் அதிகார பயணத்தைத் தொடங்குகிறார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
*பீகார் தேர்தல் தேதிகளை அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது, இது இரண்டு கட்டங்களாக நடத்தப்படலாம் என தகவல்.
* “ஜாதியை மகிமைப்படுத்துவது தேச விரோதம்”, அலகாபாத் நீதிமன்றம்: எப்அய்ஆர்கள், காவல்துறை ஆவணங்கள், பொதுப் பதிவுகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் பொதுப் பலகைகளில் இருந்து ஜாதிக் குறிப்புகளை நீக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவு.
– குடந்தை கருணா